Home » Tamil Cinema » கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது

கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இது இந்திய அதிரடி த்ரில்லர் படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் கமலஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர் தற்போது வெளியாகி வைரலானது.

அண்மையில், இளம் நடிகர் காளிதாஸ் விக்ரம் படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் ரூ. 35-40 கோடி வரையில் வியாபாரமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவேதான் அதிக விலைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்கின்ற சாதனையையும் விக்ரம் திரைப்படம் படைத்துள்ளது.

விக்ரம் போஸ்டர்

Vikram-Poster-kamal-vjs-fahad-fasil