Home » Coronavirus Songs » கொரோனா வைரஸ் பாடல் - வைர‌முத்து, SP பாலசுப்பிரமணியம்

A song from Coronavirus Movie

கொரோனா வைரஸ் பாடல் - வைர‌முத்து, SP பாலசுப்பிரமணியம்

 
Add to Book !

Coronavirus Tamil Song Vairamuthu - S.P. Balasubramaniam பாடல் தமிழ் வரிகள்

கொரோனா பாடல் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Coronavirus
Lyrics Vairamuthu
Singers S. P. Balasubramanyam
Music By

தமிழ் சினிமா பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அப்பாடலை அழகாக பாடி வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

கரோனா கரோனா கரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது

சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கரோனா கரோனா கரோனா

தொடுதல் வேண்டாம்,
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்

எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்

அத்தனை போர்களிலும் அவனே வென்றான்

கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்

நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்