Home » Songs » Chandiran Oliyil avalai kanden - Sounds of Isha Song Tamil Lyrics

Chandiran Oliyil avalai kanden - Sounds of Isha Song Tamil Lyrics

 
Add this Song to Book

சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் சரணம் என்று புகுந்து கொண்டேன் சுப்ரமண்ய பாரதி பாடல் வரிகள். Chandiraṉ oḷiyil avaḷai kaṇdēṉ Sharaṇam eṉdṟu pugunthu koṇdēṉ - Bharathiyar songs Tamil Lyrics

சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
சரணம் என்று புகுந்து கொண்டேன்

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதெ னாசையைக் கொன்று விட்டேன்

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரி லாதெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்