Home » Songs » Amaithiyana Nathiyinile Odam - Aandavan Kattalai Tamil Song - Sivaji, Devika

A song from Aandavan Kattalai Movie

Amaithiyana Nathiyinile Odam - Aandavan Kattalai Tamil Song - Sivaji, Devika

 
Add to Book !

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் பாடல் தமிழ் வரிகள்

சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Aandavan Kattalai
Lyrics Kannadasan
Singers T. M. Soundararajan, P. Suseela
Music By

Star Cast: Sivaji Ganesan, Devika, Chandrababu, A. V. M. Rajan, K. Balaji, Pushpalatha, S. A. Ashokan, Sundari Bai, Seethalakshmi, Karikol Raju, K. Nadarajan.
Director: K. Shankar
Producers: P. S. Veerappan
Music: Viswanathan–Ramamoorthy
Story: K. P. Kottarakkara

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் – (அமைதியான)

தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது (அமைதியான)

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை (அமைதியான)

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது (அமைதியான)

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் (அமைதியான)